Sakshi Agarwal Cute New Pics Spicy Beauty
யூகன், திருட்டு விசிடி, ஆத்யன்,கககாபோ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். தற்போது ஜீவன் நடித்து வரும் ஜெயிக்கிற குதிரை என்கி்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பியிருக்கும் இவர் இங்கே தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
சினிமாவில் உங்களுக்கான இடம் எப்படி உள்ளது?
நான் என்னுடைய விருப்பத்தின் காரணமாகத்தான் திரையுலகில் அடியெடுத்து வைத்தேன். நான் இன்ஜினியரிங் மாணவி மற்றும் எம்பிஏ பட்டதாரி.பேஷன் பிடிக்கும். சினிமா பிடிக்கும். என்னுடைய குடும்பத்துக்கு முழுக்க முழுக்க பிசினஸ் தான் பிரதானம். ஆனால் நான் சினிமாவை தேர்ந்தெடுத்ததும், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் நான் சிறந்த மாணவி என்பதால் ஒரு கலெக்டராகவோ அல்லது டாக்டராகவோ தான் என்னை எதிர்பார்த்தனர். ஆனால் நான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன்.அதனால் முதலில் என்னுடைய முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்தனர். ஆனால் நான் என்னுடைய முயற்சியால் திரைத்துறையில் வளரத் தொடங்கினேன். நூற்றிற்கும் மேற்பட்ட விளம்பர படங்கள், முன்னணி ராம்ப் ஷோக்களில் டாப் மாடலாக கலந்து கொண்டு கேட்வாக் போயிருக்கிறேன்.
முன்னணி நடிகையாக வலம் வருவதற்காக என்ன முயற்சி எடுத்திருக்கிறீர்கள்?
சினிமா தான் என்னுடைய வாழ்க்கை என்று தீர்மானித்த பிறகு இதில் நான் முழு தகுதியுடையவராக மாறவேண்டும் என்று விரும்பினேன். இதற்கான தேடலில் இருந்த போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் பிரபலமான நடிப்பு பயிற்சி பள்ளியான லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் திரைப்பட பயிற்சி நிறுவனம் என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த பள்ளியில் இணைந்து நடிப்பில் என்னை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டேன். இங்கு பயிற்சி பெற்ற பலர் முன்னணி நடிகையாகியிருப்பதுடன் ஆஸ்கார் விருதினையும் பெற்றிருக்கிறார்கள்.
இங்கு கிட்டத்தட்ட நான்கு மாத காலம் கடுமையாக உழைத்தேன். மெத்தட் ஆப் ஆக்டிங் என்ற நுட்பமான நடிப்பைப் பற்றி கற்று தேர்ச்சியடைந்திருக்கிறேன். இந்த நிறுவனத்தில் நடிப்பு பயிற்சி் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை நான் தான் என்பதில் எனக்கு பெருமிதமும் உண்டு. எனக்கு முன்னர் இங்கு ஸ்ரீதேவியின் மகள் ஜானவி கபூர், ரன்பீர் கபூர், இம்ரான் கான் ஆகியோர் நடிப்பு பயிற்சியைப் பெற்றிருக்கிறார்கள். ஸ்கார்லெட் ஜோகன்சன், உமா துர்மன் உள்ளிட்ட சர்வதேச நடிகைகளும் இங்கு பயிற்சி பெற்றவர்கள் தான். இங்கு நடிப்பை கற்றுக் கொண்டது வித்தியாசமான அனுபவம் தான்.
அது என்ன மெத்தட் ஆஃப் ஆக்டிங் ?
இது நம்முடைய வாழ்க்கையில் நடைபெற்ற அனுபவங்களையும், உணர்வுகளையும் மீட்டெடுத்து அதனை ஏற்கும் கேரக்டரின் தன்மையுடன் பிரதிபலிப்பது தான் மெத்தட் ஆஃப் ஆக்டிங். உலக அளவில் நடிப்பிற்கு இருக்கும் ஸ்டேன்ஸ்லெவாஸ்கி (Stanislavski) லீ ஸ்ட்ராஸ்பெர்க்,. ஸ்டெல்லா அட்லர், மெய்ஸ்னர், மைக்கேல் செக்காவ், உடா ஹேகன், வயோலா ஸ்பொலீன், உள்ளிட்ட எட்டு வகையான நுணுக்கங்களில் டெப்த் லெவல் ஆஃப் ஆக்டிங்கை வெளிப்படுத்துவது மெத்தட் ஆஃப் ஆக்டிங் மட்டுமே. அதனால் இதனை கசடற கற்பிக்கும் லீ ஸ்ட்ராஸ்பெர்க் என்னும் பயிற்சி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தேன். இதனுடன் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நடவடிக்கையை உற்றுக் கண்காணித்து, அவர்களின் நடை உடை பாவனை பேச்சுமொழி ஆகியவற்றை உள்வாங்கிக் கொண்டு, அதனை நம்முடைய நடிப்புத்திறனுடன் இணைத்து திரையில் வழங்குவது தான் மெத்தட் ஆஃப் ஆக்டிங். பயிற்சியின் போது ஸீன் ஸ்டடி, எக்ஸ்ப்ரீமெண்ட் ஆக்டிங், ஃபர்பாமென்ஸ் பிரசன்ட்ஸ் ஆகியவற்றில் நல்லதொரு தேர்ச்சியைப் பெற்றிருக்கிறேன். இதனை அங்கு நடிப்பைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் என்னைப் பாராட்டினார்கள். அத்துடன் எந்த கேரக்டரில் நடிக்கிறாயோ அந்த கேரக்டரில் முழு நம்பிக்கையுடன் நடித்தால் நிச்சயம் முன்னணி நடிகையாக உயர்வாய் என்ற கருத்தினையும் பகிர்ந்துகொண்டார்கள். அத்துடன் எந்த நடிகரும் தான் ஏற்கும் கேரக்டரில் நடிக்கக்கூடாது. அந்த கேரக்டராகவே மாறவேண்டும். அந்த கேரக்டரை உள்வாங்கிக் கொண்டு, உணர்ந்து நடிக்கவேண்டும். இதனை உடனடியாக செய்திட இயலாது. இதற்கு பயிற்சி வேண்டும். இதற்கு தேவையான உடல் சார்ந்த பயிற்சி, மனம் சார்ந்த பயிற்சி, உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய பயிற்சி என சில நுட்பமான விசயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அதே போல் மெத்தட் ஆஃப் ஆக்டிங்கில் அப்சர்வேசன் முக்கியமான விசயமாக இருக்கிறது. இது ஒரு வகையான நேச்சுரல் வே ஆஃப் ஆக்டிங். இந்த பயிற்சியைப் பெற்றதன் மூலம் என்னுடைய திரையுலக பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ரிலாக்சேஷன் டெக்னிக் என்ற ஒரு நுட்பத்தையும் கற்றிருக்கிறேன். இது டெப்த் லெவல் ஆஃப் ஆக்டிங்கை வெளிப்படுத்த இன்றியமையாதது.
அங்கு வேறு என்ன கற்றுக் கொண்டீர்கள்?
பூட்டி பேர் (Booty Barre) என்ற ஒரு வகை நடனப் பயிற்சியையும் கற்றுத் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். அத்துடன் பிலாட்டீஸ் மற்றும் கிக் பாக்சிங் ஆகியவற்றையும் கற்றிருக்கிறேன்.
தற்போதைய சூழலில் மோஷன் கேப்சரிங், கிரீன்மேட், கிராபிக்ஸ் ஷாட்ஸ் போன்றவை படமாக்கப்படும் போது இந்த மெத்தட் ஆஃப் ஆக்டிங் கைக்கொடுக்குமா?
மெத்தட் ஆஃப் ஆக்டிங்கிற்கு நேர் எதிரானது இது எமோஷனல் மெமரி ரீகால் டெக்னிக். இது முழுக்க முழுக்க ஒரு நடிகரின் மேஜிக்.இது ஒவ்வொரு கலைஞர்களுக்கும் சவாலானது தான். ஆனால் இந்த சவாலை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது குறித்தும் பயிற்சி பெற்றிருக்கிறேன். எந்த ஒரு நடிகரும் எப்போதும் தன்னுடைய முழுமைமான நடிப்பை தான் ஏற்கும் கேரக்டர் மூலம் வழங்கிட இயலாது. இது தான் யதார்த்தம்.
ஒரு திரைப்படத்தின் வெற்றி அதில் நடித்திருக்கும் நடிகைகளுக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கிறது?
ஒரு திரைப்படத்தின் வெற்றி அதில் நடித்திருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை திரையில் தோன்றும் ஒரு கேரக்டரில் நான் அதற்கான உழைப்பை நேர்மையாக கொடுத்திருந்து, அதனைப் பார்த்து எனக்கு திருப்தியும், மனநிறைவும் ஏற்பட்டால் நான் வெற்றிப் பெற்றதாக நினைப்பேன். அதே சமயத்தில் ஒவ்வொரு நடிகைகளுக்கும் ஒரு கமர்ஷியல் முகம் இருக்கிறது. அத்துடன் ஒரு கலைஞர் என்ற முகமும் இருக்கிறது. இந்த இரண்டு முகமும் ஒரு நடிகைக்கு தேவை என்று நினைக்கிறேன்.
உங்களின் கவர்ச்சியின் எல்லை குறித்து..?
எல்லாவிதமான கேரக்டரில் நடிப்பது எளிது. ஆனால் கவர்ச்சியான கேரக்டரில் நடிப்பது தான் கடினம்.ஏனெனில் கவர்ச்சியான கேரக்டர் கிடைப்பது கடினம். ரசிகர்களை தன்னுடைய கிளாமரில் ஈர்ப்பது என்பது அதைவிட கடினம். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான கவர்ச்சி பிடிக்கும். அதே சமயத்தில் கவர்ச்சியை, கலையின் ஒரு பகுதி என்ற கோணத்தில் தான் நான் பார்க்கிறேன். அத்துடன் கவர்ச்சியாக நடிக்கவேண்டும் எனில் உடல் மொழி, அங்க அமைப்பு, உடைகள், கேமிரா கோணங்கள், இயக்குநரின் கற்பனை என பல விசயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. இதில் எல்லாம் சரியான புரிதலுடன் கேரக்டரின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிகைகளின் கவர்ச்சி தான் திரையில் சரியாக எடுபடும். எனவே எனக்கேற்ற A வகையிலான கவர்ச்சியை எல்லையை நானே தீர்மானித்து திரையில் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்வேன்.
திரையில் தோன்ற விரும்பும் கேரக்டர் குறித்து..?
இந்த கேள்வியை நான்கு மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் எப்படி பதில் சொல்லியிருப்பேன் என்று தெரியாது. ஆனால் லீ ஸ்ட்ராஸ்பெர்க்கில் மெத்தட் ஆஃப் ஆக்டிங்கில் தேர்ச்சிப் பெற்ற பிறகு எந்த கேரக்டரிலும் என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஆக்ஷன், காமெடி, ஹீரோயின் ஓரியண்டட் ஸ்கிரிப்ட் என எந்த வகையான படங்களிலும் நடிக்க, நான் முழு அளவில் தகுதிப்படுத்திக் கொண்டு தயாராகயிருக்கிறேன்.
சினிமாவைத் தவிர்த்து உங்களின் பொழுதுபோக்கு..?
மசாராட்டி ( maserati ) சூப்பர் காரில் நெடுஞ்சாலையில் வேகமாக பயணிப்பது மிகவும் பிடிக்கும். அண்மையில் அமெரிக்காவில் இருக்கும் போது எனக்கு சொந்தமான இந்த வகையான காரில் பயணித்தபோது அதிகமான சந்தோஷத்தை அடைந்தேன். தற்போது அந்த காரை இங்கு கொண்டு வர இயலாதததால் வருத்தமாகவும் இருக்கிறேன்.